உம்
அன்பே போதும் என் தேவா
நீரின்றி
நானில்லை தேவா தேவா
யாரென்னை
கைவிட்டாலும்
நீர்
என்னை காத்து கொள்வீர்
யாரென்னை
வெறுத்தாலும்
நீர்
என்னை அணைத்து கொள்வீர்
உம்
அன்பே ஒன்றே போதும் என் தேவா
மண்ணில்
நானும் வாழும் வரை
பாவத்தால்
பிரிந்திருந்தேன்
உம்
பாசத்தால் அணைத்து கொண்டீர்
பாவியாய்
வாழ்ந்த என்னை
உம்
பிள்ளையாய் மாற்றி விட்டீர்
என்
அன்னை நீரே தந்தை நீரே
உயிரை
தந்த இயேசு நீரே
No comments:
Post a Comment