மண்ணில்
வந்த தேவன் எண்ணில் வந்தாரே
என்னில்
வந்த தேவன் என் உள்ளம் வென்றாரே
இவர்
அன்பின் சாட்சி நான் இவர் எந்தன் மூச்சு தான்
வல்லவர்
சர்வ வல்லவர் வென்றவர் சாவை வென்றவர்
சேற்றினின்று
தூக்கி எடுத்து பாவமெல்லாம் மன்னித்தார்
நோய்களெல்லாம்
நீக்கி என்னை தழும்பினாலே சுகமாக்கினார்
இவர்
நாமம் அதிசயமானவர் செயலில் வல்லமை உள்ளவர்
உலகம்
என்னை வெறுத்த போது அணைத்த தேவன் அன்பானவர்
உலகம்
என்னை சபித்த பொது அணைத்த தேவன் அற்புதர்
அவர்
வார்தையாலே பிழைக்கிறேன் அவர் ஆவியாலே பிழைத்திடுவேன்
இருந்த
வாழ்க்கை கசந்த நேசம் பொய்யும் புரட்டும் மறைந்ததே
புதிய
ஆவி நிறைந்த நேசம் புதிய ஜீவன் மலர்ந்ததே
பொய்
மாயை உலகில் சாய்ந்திருந்தேன்
மெய்
சாட்சியாய் இயேசு நிறுத்தினாரே
ஜெயத்தின்
தேவன் இயேசு எனக்குள் வசிக்கின்றனர்
மகிமை
ராஜன் இயேசு எனக்குள் வாழ்கின்றார்
No comments:
Post a Comment