Friday, 25 August 2017

வானாதி வானங்கள் யாவையும் படைத்தவர்

வானாதி வானங்கள் யாவையும் படைத்தவர்
வார்த்தையால் உலகத்தை மகிமையாய்  நிறைத்தவர்
ராஜாதி ராஜனே  கர்த்தாதி கர்த்தனே
ஆல்பா ஒமேகாவே

உம்மை பாடுவேன் என் இயேசுவே
உம்மை போற்றுவேன் என் நேசரே
உம்மை புகழுவேன் என் ராஜனே - என்றென்றுமே
அல்லேலூயா அல்லேலூயா  அல்லேலூயா
கிறிஸ்து ராஜனே  - அல்லேலூயா  அல்லேலூயா
இயேசு


அதி அந்தமானவரே  அக்கினியின் தேவனே
சேனையின் கர்த்தரே செங்கடலை பிளந்தவரே
திரியேக தேவனே மரணத்தை வென்றவரே
உயிர்த்தெழுந்த இயேசுவே

எரிகோவை தகர்த்தவர்  இருளை வெளிச்சமாக்குபவர்
கடல் மீது நடந்தவர் கறைகளை துடைத்தவர்
கரம் பிடித்து நடத்துபவர்  கண்ணீரை துடைப்பவர்

காயங்களை ஆற்றுபவர் 

No comments: