Friday, 25 August 2017

கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே

R-Slow Rock          T-95          G            6/8

கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை
நீங்க தான்பா என் நம்பிக்கை
உம்மை அன்றி வேறு துணை இல்லை

தேவைகள் ஆயிரம் என்னுள் இருப்பினும்
சோர்ந்து போவதில்லை என்னோடு நீர் இருக்க
தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரோல்லோ
நினைப்பதைக் காட்டிலும் செய்பவர் நீரோல்லோ


மனிதனின் தூஷணை மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கம் உண்டு தோல்விகள் எனக்கு இல்லை
நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு ஒரு போதும் கலக்கம் இல்லை

No comments: