Friday, 25 August 2017

ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க

R-16 Beat Ballad             T-78          G            4/4

ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
ஆராதனை - 3 ஓ...... நித்தியமானவரே
நீரே நிரந்தமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன்

கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்


வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்

வானாதி வானங்கள் யாவையும் படைத்தவர்

வானாதி வானங்கள் யாவையும் படைத்தவர்
வார்த்தையால் உலகத்தை மகிமையாய்  நிறைத்தவர்
ராஜாதி ராஜனே  கர்த்தாதி கர்த்தனே
ஆல்பா ஒமேகாவே

உம்மை பாடுவேன் என் இயேசுவே
உம்மை போற்றுவேன் என் நேசரே
உம்மை புகழுவேன் என் ராஜனே - என்றென்றுமே
அல்லேலூயா அல்லேலூயா  அல்லேலூயா
கிறிஸ்து ராஜனே  - அல்லேலூயா  அல்லேலூயா
இயேசு


அதி அந்தமானவரே  அக்கினியின் தேவனே
சேனையின் கர்த்தரே செங்கடலை பிளந்தவரே
திரியேக தேவனே மரணத்தை வென்றவரே
உயிர்த்தெழுந்த இயேசுவே

எரிகோவை தகர்த்தவர்  இருளை வெளிச்சமாக்குபவர்
கடல் மீது நடந்தவர் கறைகளை துடைத்தவர்
கரம் பிடித்து நடத்துபவர்  கண்ணீரை துடைப்பவர்

காயங்களை ஆற்றுபவர் 

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்

வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்
கீழ கெடந்த என்ன
மேல தூக்கி வச்சு
கிருப மேல கிருப தந்து
உயர்த்தி வைத்தீர்
உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன்
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன்

பல வண்ண அங்கி ஜொலித்ததினாலே
பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க
தந்தீங்க ராஜ வஸ்திரம்
அத ஒருத்தனும் நெருங்க முடியல
அடிம என்ன அதிபதியா
மாத்திப்புட்டீங்க


மோசேயே போல கொலைகாரன் என்று
தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க
வந்தீங்க முட்செடியினில்
என்னை மீண்டும் உயர்த்தி வைக்கவே
வேண்டானு சொன்னவங்கள
நடத்த வச்சிங்க

வல்ல கிருபை நல்ல கிருபை

வல்ல கிருபை நல்ல கிருபை
வழுவாமல் காத்த சுத்த கிருபை
அக்கினியில் வேகாமல் காத்த கிருபை
தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை
உம் கிருபை என்னை தாங்கிடுதே
உம் கிருபை என்னை நடத்திடுதே (2)
அல்லே அல்லே லூயா
அல்லே அல்லே லூயா (2)

1. அக்கினியின் சூளையில் வெந்து வெந்து போகாமல்
கிருபை தாங்கினதே
ஹே முடி கூட கருகாமல்
புகை கூட அணுகாமல்
கிருபை தாங்கினதே
அல்லே அல்லே லூயா
அல்லே அல்லே லூயா (4)

2. பலவித சோதனை நெருக்கிய நேரங்கள்
கிருபை தாங்கினதே
என் நெருக்கத்தின் நேரத்தில்
நசுங்கி நான் போகாமல்
கிருபை தாங்கினதே
அல்லே அல்லே லூயா
அல்லே அல்லே லூயா (4)
(வல்ல கிருபை…)

யெகோவாயீரே நீர் என் தேவனாம்

R-16 Beat Ballad             T-80          G            4/4

யெகோவாயீரே நீர் என் தேவனாம்
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
ஆராதனை
இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்

யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
நீர் எந்தன் மருத்துவரே

யெகோவா ரூவா நீர் என் தேவனாம்
என் தேவைகள் நீர் அறிவீர்

என் தேவைகள் நீர் அறிவீர்
நீர் எந்தன் நல் மேய்ப்பரே

மண்ணில் வந்த தேவன் எண்ணில் வந்தாரே

மண்ணில் வந்த தேவன் எண்ணில் வந்தாரே
என்னில் வந்த தேவன் என் உள்ளம் வென்றாரே
இவர் அன்பின் சாட்சி நான் இவர் எந்தன் மூச்சு தான்
வல்லவர் சர்வ வல்லவர் வென்றவர் சாவை வென்றவர்

சேற்றினின்று தூக்கி எடுத்து பாவமெல்லாம் மன்னித்தார்
நோய்களெல்லாம் நீக்கி என்னை தழும்பினாலே சுகமாக்கினார்
இவர் நாமம் அதிசயமானவர் செயலில் வல்லமை உள்ளவர்

உலகம் என்னை வெறுத்த போது அணைத்த தேவன் அன்பானவர்
உலகம் என்னை சபித்த பொது அணைத்த தேவன் அற்புதர்
அவர் வார்தையாலே பிழைக்கிறேன் அவர் ஆவியாலே பிழைத்திடுவேன்

இருந்த வாழ்க்கை கசந்த நேசம் பொய்யும் புரட்டும் மறைந்ததே
புதிய ஆவி நிறைந்த நேசம் புதிய ஜீவன் மலர்ந்ததே
பொய் மாயை உலகில் சாய்ந்திருந்தேன்
மெய் சாட்சியாய் இயேசு நிறுத்தினாரே

ஜெயத்தின் தேவன் இயேசு எனக்குள் வசிக்கின்றனர்

மகிமை ராஜன் இயேசு எனக்குள் வாழ்கின்றார் 

புதுவாழ்வு தந்தவரே

R-80’s Disco          T-130         G            2/4

புதுவாழ்வு தந்தவரே
புது துவக்கம் தந்தவரே
நன்றி உமக்கு நன்றி
முழுமனதுடன் சொல்லுகின்றோம்
நன்றி உமக்கு நன்றி
மனநிறைவுடன் சொல்லுகின்றோம்

பிள்ளைகளை மறவாமல்
ஆண்டு முழுவதும் போஷித்திரே
குறைவுகளை கிறிஸ்துவுக்குள்
மகிமையில் நிறைவாக்கி
நடத்தினீரே

முந்தினதை யோசிக்காமல்
பூர்வமானதை சிந்திக்காமல்
புதியவைகள்
தோன்ற செய்தீர்
சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர்


கண்ணீருடன் விதைத்தெல்லாம்
கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர்
எந்தி நின்ற கரங்கள் எல்லாம்
கொடுக்கும் கரங்களாய்
மாற்றிவிட்டீர்

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா

R-70 Disco Funk      T-128         Fm           2/4

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா
நானிலத்தில் நீ என்றும் ராஜா
உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை
உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை
அல்லேலூயா அல்லேலூயா
உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா

நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா
எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ
புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே
ராஜாக்களோடு அமர்த்தினீரே

உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன்

ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்
அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர்
அறியாத ஜாதியை வரவழைத்தீர்
நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர்

வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும்
எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே
நம்பினோர் நட்டாத்தில் கைவிட்டாலும்
என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே

நீரே எல்லாம் நீரே எல்லாம் நீரே எல்லாம் - இயேசுவே

R-8 Beat             T-90          Dm           4/4

நீரே எல்லாம் நீரே எல்லாம் நீரே எல்லாம் - இயேசுவே
உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம் இயேசுவே

ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் - இயேசுவை
இன்பமோ துன்பமோ சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன் இயேசுவை

நேசிப்பேன் நேசிப்பேன் நேசிப்பேன் இயேசுவை
நன்மையோ தீமையோ செல்வமோ வறுமையோ
நேசிப்பேன் இயேசுவை

பின் தொடர்வேன் பின் தொடர்வேன் பின் தொடர்வேன் இயேசுவை
வேற்றியோ தோல்வியோ நிந்தையோ புகழ்ச்சியோ
பின் தொடர்வேன் இயேசுவை

நீர் என் பாதையும் சத்தியமும் ஜீவனே - இயேசு ராஜா

R-Hiphop             T-110         F             4/4

நீர் என் பாதையும் சத்தியமும் ஜீவனே  - இயேசு ராஜா
உம்மை ஆராதிப்பேன்
நீர் என் கன்மலை கோட்டையே ஜீவனே - இயேசு ராஜா
உம்மை ஆராதிப்பேன்

எல்ரோயீ என்னை காண்பவரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
ஏலோஹிம் எங்கும் நிறைந்தவரே
ஏழை எந்தன் கரம் பிடித்தவரே

முழு இதயத்தோடு உம்மை ஆராதிப்பேன்
முழு உள்ளதோடு உம்மை ஆராதிப்பேன்

தாழ்வில் இருந்த என்னை நினைந்தவரே
தாயை போல என்னை சுமந்தவரே
சொந்த ஜீவனை தந்தவரே
எந்தன் இதயத்தை கவர்ந்தவர்

நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்

R-Slow Rock          T-110         F             6/8

நான் என் நேசருடையவன் என் நேசர் என்னுடையவர்
சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
இவரே என் நேசர் இவரே என் சிநேகிதர்
இவரே என் பிரியமானவர்

பாவியான என்னையும் அவர் தேடி வந்தாரே
மணவாளனும் என் தோழனும் எனக்கெல்லாமானாரே
அவர் சேவை செய்வேன்
அவர்க்காகவே வாழ்வேன்

தனிமையான நேரத்தில் என் துணையாய் வந்தாரே
பெலவீனமான நேரத்தில் தம் கிருபை தந்தாரே
அவர் நாமம் உயர்த்துவேன்
அவர் சாட்சியாய் வாழ்வேன்

எனக்காகவே யாவையும் அவர் செய்து முடித்தாரே
ஏற்ற நேரத்தில் என் தேவைகள் யாவும் சந்தித்தார்
உயிருள்ள நாளெல்லாம்
அவர் நாமம் பாடுவேன்


என்னையும் அவருடன் அழைத்துச் சென்றிட
மேகங்கள் மீதிலே வேகம் வருவாரே
அவரோடு வாழ்வேன்
நான் நித்ய நித்தியமாய்

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே

R-Biola        T-130         F             6/8

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரே
அவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே
அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்தது
அவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது
அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன்

உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரே
அரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரே
என் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரே
என் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரே

அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன்

இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரே
நீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரே
கிருபைய தந்து என்ன உயர்த்தி வச்சாரே -என்
நாவின் மேலே அதிகாரம் வச்சாரே

அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன்

உலர்ந்துபோன என் கோலை துளிர்க்கச் செய்தாரே
ஜீவனற்று என் வாழ்வில் ஜீவன் தந்தாரே
ஒரு சேனையைப்போல என்னை எழும்பச் செய்தாரே
என் தேசத்தை சுதந்தரிக்கும் பெலனைத் தந்தாரே


அவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன்

நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்

R-Biola        T-145         C            6/8

நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம்
உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம்
வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம்
கரங்களினால் இன்று நிறைவேற்றினீர்
நன்றி -2 சொல்வோம் உயிர் உள்ளவரை
ஒன்றும் குறையாமல் காத்திடும் நல்லவரை

காற்றுமில்ல மழையுமில்ல
ஆனாலும் வாய்க்காலை நிரப்பினீரே

உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்
மாறாமல் எப்போதும் காத்துக் கொண்டீர்

கைவிடாமல் விட்டு விலகிடாமல்
நெருங்கின பாதையிலும் கூட வந்தீர்

வெட்கப்பட்ட தேசத்திலே
கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்கினீரே


நம்பிக்கை உடைய சிறைகளே

நம்பிக்கை உடைய சிறைகளே
அரணுக்கு திரும்புங்கள்
இரட்டிப்பானதை தருகிறார்
இன்றைக்கு திரும்புங்கள்

நீ விலக்கப்பட்ட உன்
ஸ்தானத்திற்கே மறுபடியும்
உன்னை அழைக்கின்றார்

அவர் சொல்லிட்ட நல்வார்த்தை
நிறைவேற்றினார்

Aliyah Aliyah Aliyah Aliyah
அரணுக்கு திரும்புவோம்
Aliyah Aliyah Aliyah Aliyah
கர்த்தரை உயர்த்துவோம்

கொள்ளை கொண்ட உன்
பட்டணத்தை மறுபடியும்
குடியேற்றுவார்
இராஜாக்கள் உன்னை தேடி
வர வாசலை இராப்பகல்
திறந்து வைப்பார்

(உன்னை)ஒடுக்கினோரை குனிய
செய்வார் பரியாசம்
செய்தோரை பணிய செய்வார்
சத்துருவின் வாசல்களை மேற்கொள்ளும்
கிருபையை உனக்குத் தந்தார்

தேசத்திலே கொடுமையில்லை அழிவை
உன் எல்லையில் கேட்பதில்லை
இரட்சிப்பை உனக்கு மதிலாக்கினார்
உந்தன் வாசலை துதியாக்கினார்

அவர் சொன்னதை சிலுவையில்
நிறைவேற்றினார்

Aliyah Aliyah Aliyah Aliyah
அரணுக்கு திரும்புவோம்
Aliyah Aliyah Aliyah Aliyah
கர்த்தரை உயர்த்துவோம்

தேவா உம் சமூகத்தில் நின்று

தேவா உம் சமூகத்தில் நின்று
உம் நாமம் இன்று உயர்த்துவேன்
ஈடு இணையில்லா உந்தன் அன்பை
எந்நாளும் வாழ்த்திடுவேன்
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
நன்மை செய்த எந்தன் நல்மேய்ப்பரே

கண்களை ஏறெடுப்பேன்
என்தன் கன்மலையே
எந்தன் மறைவிடமே
ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா - உமக்கே
ஹாலேலூயா ஹாலேலூயா எந்தன் பரிசுத்தரே
எந்தன் தஞ்சம் என்தன் வெளிச்சம்
எந்தன் சுவாசம் நீரே
நேற்றும் இன்றும் என்றும் மாறா
உந்தன் அன்பை சொல்லி பாடிடுவேன்

தேவா உம் சிங்காசனம் முன்னே
உம் பாதம் இன்று பணிகின்றோம்
தாழ்மையில் எம்மை கண்டவர் நீரே
உம் அன்புக்கு இணையில்லையே
வல்லவரே உம மகத்துவம் பெரிது

உம தயவால் இன்று நிலை நின்றோம்

தேவனே என்னைத் தருகிறேன்

R-Piano Ballad        T-78          C            4/4

தேவனே என்னைத் தருகிறேன்
உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்
யாவையும் நீர் தந்ததால்
உம்மிடம் திரும்ப தருகின்றேன்
எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்
உந்தனுக்கே தருகின்றேன்
எங்கள் ஆராதனை உமக்கே
எங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே

ஊழியம் நீர் தந்தது
உயர்வுகள் நீர் தந்தது
மேன்மைகள் நீர் தந்தது
செல்வமும் நீர் தந்தது


தரிசனம் நீர் தந்தது
தாகமும் நீர் தந்தது
கிருபைகள் நீர் தந்தது
அபிஷேகம் நீர் தந்தது

தாயினும் மேலாய் என்மேல்

R-Guitar Ballad        T-85          F             4/4

தாயினும் மேலாய் என்மேல்
அன்பு வைத்தவர் நீரே
ஒரு தந்தையைப் போல
என்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே
என் உயிரோடு கலந்தவரே
உம் உறவாலே மகிழ்ந்திடுவேன்
உன் மேல் அன்பு வைத்தேன் -நான்
உமக்காக எதையும் செய்வேன்

கைவிடப்பட்ட நேரங்களெல்லாம்
உம் கரம் பிடிப்பேன்
எனைக் காக்கும் கரமதை
நழுவவிடாமல் முத்தம் செய்வேன்


எந்தன் கால்கள் இடறும் போது
விழுந்திட மாட்டேன் - உம்
தோளின் மீது ஏறிக்கொண்டு
பயணம் செய்வேன்

கண்ணீரால் நன்றி சொல்கிறேன்

கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே
நன்றி நன்றி அய்யா இயேசையா
பல கோடி நன்மை செய்தீரே
நன்றி நன்றி அய்யா இயேசையா
பல கோடி நன்மை செய்தீரே

தாழ்வில் என்னை நினைத்தீரே
தயவாய் என்னை உயர்த்தினீரே
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி ஐயா

போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்
உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
கால்கள் இடராமல் பாதுகாத்தீர்
கண்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி ஐயா


உந்தன் இரத்தம் எனக்காய் சிந்தி
சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
பாவமெல்லாம் போக்கினீரே சாபமெல்லாம் நீக்கினீரே
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி ஐயா

கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே

R-Slow Rock          T-95          G            6/8

கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை
நீங்க தான்பா என் நம்பிக்கை
உம்மை அன்றி வேறு துணை இல்லை

தேவைகள் ஆயிரம் என்னுள் இருப்பினும்
சோர்ந்து போவதில்லை என்னோடு நீர் இருக்க
தேவையைக் காட்டிலும் பெரியவர் நீரோல்லோ
நினைப்பதைக் காட்டிலும் செய்பவர் நீரோல்லோ


மனிதனின் தூஷணை மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கம் உண்டு தோல்விகள் எனக்கு இல்லை
நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு ஒரு போதும் கலக்கம் இல்லை

கர்த்தரின் பிரசன்னத்தை தேடிவந்தேன் என்

கர்த்தரின் பிரசன்னத்தை தேடிவந்தேன் என்
தேவனின் சமூகத்தை நாடி வந்தேன்

கர்த்தரின் சமூகம் தேடின எனக்கு நன்மைகள் குறையவில்லை
கர்த்தரின் கரத்தில் நான் இருப்பதாலே வீழ்ந்து போவதில்லை

பிரசன்னனமே உம் பிரசன்னனமே – பிரசன்னனமே தேவ பிரசன்னனமே
பிரசன்னனமே உம் பிரசன்னனமே – பிரசன்னனமே உந்தன் பிரசன்னனமே
சமூகமே உம் சமூகமே – சமூகமே என் தேவா சமூகமே
சமூகமே சமூகமே உம் சமூகமே உந்தன் சமூகமே

கர்த்தர் என் விளக்கை ஏற்றிடும் போது மங்கி எரிவதில்லை

கர்த்தர் என்னோடு வருவதினாலே தோல்வி என்றும் இல்லை 

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்

ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடமும்
உம்மையே நான் தேடனுமே
உந்தன்
 அன்புக்காகவே
என்
 உள்ளம் ஏங்குதே
உம்மையே
 நான் வாஞ்சிக்கிறேன்
 
இயேசுவே இயேசுவே
உம்மை
 நான் நேசிக்கிறேன்
கவலையும் கண்ணீரும் நீர் மாற்றினீர்
மனபாரமும்
 வேதனையும் நீர் மாற்றினீர்
உம்மை
 போல யாருமில்லை
 
எனக்காகவே ஜீவனை நீர் தந்தீரே
என்
 சாபங்களை சிலுவையில் நீர் சுமந்தீரே
உம்மை
 போல யாருமில்லை

பெலவானாய் என்னை மாற்றினவர்

பெலவானாய் என்னை மாற்றினவர்
நீதிமான் என்று அழைக்கின்றவர்
எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்
முன்னின்று சத்துருவை துரத்துபவர்
இஸ்ரவேலின் மகிமையவர்

ஏல் யெஷ¨ரன் எனக்காக யாவையும் செய்து முடிப்பவரே
ஏல் யெஷ¨ரன் எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே

நீ என் தாசன் என்றவரே
நான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரே
பாவங்கள் யாவையும் மன்னித்தீரே
சாபங்கள் யாவையும் நீக்கினீரே
மீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை

பயப்படாதே என்றவரே
நான் உன்னை மறவேன் என்றவரே
சந்ததி மேல் உம் ஆவியையும்
சந்தானத்தின் மேல் ஆசியையும்
ஊற்றி ஊற்றி நிறைத்தவரே


என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி

R-Disco Philly         T-128         F             2/4

என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி
உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ
நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன்
நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன்
எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமே
எங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன்

ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர்
உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர்
எதிரான யோசனை அதமாக்கினர்
உந்தனின் யோசனை நிறைவேற்றினீர்

ஆயிரம் என்னோடு போரிட்டாலும்
என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே
கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர்
நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர்


கரடான பாதையில் தூக்கிச் சென்றீர்
முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர்
எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்
நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர்